தமிழகம்

காதலன் மரண செய்தி கேட்டு கதறி அழுத இளம்பெண்! அதிகாலையில் தோழிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Girl commit suicide after hearing lover suicide news

மோஹாலி குருக்ஷேத்ராவைச் சேர்ந்தவர் சாஹில் குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் 26 வயது நிறைந்த பிரக்யா. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் விருந்தினர் விடுதியில் வசித்து வந்துள்ளார்.

சாஹில்குமார் மற்றும் பிரக்யா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டதாகவும், அவர்களது குடும்பத்தினரும் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் சாஹில்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிய வந்தநிலையில் இன்று பிரக்யாவும் தனது விடுதியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரக்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement