கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி! ஊருக்கே சோறு போட்ட இனம் நிவாரண பொருளுக்காக சாலையில் ஓடும் அவலம்

கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி! ஊருக்கே சோறு போட்ட இனம் நிவாரண பொருளுக்காக சாலையில் ஓடும் அவலம்


gaja-affected-people-running-behind-relief-van

"கஜா புயல்"  இந்த ஒற்றை வார்த்தை தான், அனைவரும் காமெடியாக நினைத்த இந்த ஒற்றை வார்த்தை டெல்டா மாவட்டங்களை ஒரே இரவில் சுருட்டி போட்டுவிட்டது. டெல்டா மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. டெல்டா மாவட்ட மக்களை 20 வருடங்கள் பின்னுக்கு தள்ளிவிட்டது.

"குடிக்க கூட தண்ணீர் இல்லை; எங்க மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை; தாகம் தீர்க்கும் தென்னம்பிள்ளை; சேதம் இல்லன்னு சொன்ன சர்க்காருக்கு கண்ணு நொல்ல; ஆறுதல் சொல்ல கூட எங்களுக்கு யாரும் வல்ல; ஒத்தை இரவு அடிச்ச காத்தில மொத்த கனவும் கலைஞ்சு போச்சு; பெத்தபுள்ள வெளிநாடு பறந்தாலும், காசு பணம் அனுப்ப மறந்தாலும், வச்சப்புள்ள நீதானே கொலகொலயா காச்சு ஓல வைக்க உதவுன; வேரோடு சாஞ்சியே! நீ வேரோடு சாஞ்சியே! வயலால் வாழ்ந்தோம்; புயலால் வீழ்ந்தோம்; மீதமுள்ளதை விழயவைப்போம் சோழதேசம் யார் என்று புரிய வைப்போம்; ஊருக்கே சோறு போட்ட ஊருடா; இன்னைக்கு நிவாரணத்தை தேடி ஓடுதடா!" இந்த வரிகள் தான் எனக்கு இந்த விடியோவை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது.

gaja affected people running behind relief van

நாகை மாவட்டத்தில் வீடுகளையும் உண்ண வைத்திருந்த உணவுப்பொருட்களையும் புயலில் இழந்த ஒரு கிராமத்து மக்கள் நிவாரண பொருட்கள் வழங்க வந்த வண்டியின் பின்னால் ஓடும் காட்சி மனதை உருக்குகிறது. இந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்கள்; புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை மற்றும் ஏக்கம் உங்களுக்கு புரியும்.