தமிழகம்

தஞ்சையில் ராஜராஜன் என்ற மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை.!

Summary:

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் ராஜராஜன், சச்சின், சீசர், டாப்சி உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் ராஜராஜன், சச்சின், சீசர், டாப்சி உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பறியும் பணியில் ஈடுபட்ட ராஜராஜன் என்ற மோப்பநாய் நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது.

மரணமடைந்த ராஜராஜன் மோப்ப நாயின் உடல் துப்பறிவு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ராஜராஜன் மோப்பநாய் தஞ்சை மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களை துப்பறிவதில் காவல்துறையினருக்கு உற்றத்துணையாக விளங்கி உயிரிழந்த ராஜராஜன் என்ற மோப்பநாயின் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 


Advertisement