தமிழகம் லைப் ஸ்டைல்

இரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நண்பன்..! அவரது நினைவுநாளில் சக நண்பர்கள் செய்த காரியம்..! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Friends donates blood on friend death anniversary date

சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் விபத்தில் உயிர் இழந்த நண்பனின் நினைவு நாளில் சக நண்பர்கள் இரத்த தானம் வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்‌பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வசித்து வந்தவர் நிர்மல் கு‌மார். கடந்த ஆண்டு மதுராந்தகத்தில் இருந்து சென்னைக்கு‌ இருசக்கர வாகனத்தில் சென்ற நிர்மல் குமார் மறைமலை நகர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி அரசு மருத்து‌வமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உயிருக்கு போராடிய நிர்மலுக்கு உரிய நேரத்தில் ‌ரத்தம் கிடைக்காததால் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்மல் இறந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அவரது நினைவு நாளை முன்னிட்டு நிர்மலின் நண்பர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தனர்.

இதுகுறித்து பேசிய அவர்கள், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால்தான் எங்கள் நண்பன் உயிர் இழந்தான். இரத்தம் கிடைக்காமல் இனி எந்த உயிரும் பறிபோக கூடாது, எனவே நண்பனின் நினைவு நாளை முன்னிட்டு இனி ஆண்டுதோறும் இரத்த தானம் செய்ய உள்ளதாக அவர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.


Advertisement