
செல்போனிற்க்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து பணம் செலுத்திய நபர்..!! பின்னர் அந்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் செல்போனிற்க்கு கடந்த மாதம் 26-ம் தேதி அன்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டவை, உங்களுடைய செல்போன் சிம்கார்டுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. நீங்கள், 24 மணி நேரத்துக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் செல்போன் சேவை முடக்கப்படும், என்று அலைபேசி எண்ணுடன் சேர்த்து கூறப்பட்டிருந்தது.
தனது சேவை முடக்கப்பட்டு விடும் என்ற பயத்தில், அந்த நபர் அதில் குறிப்பிட்டள்ள அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது அதில் பேசிய நபர் உடனடியாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டும், உங்களது மொபைலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியில் உங்களது வங்கி கணக்கை இணைத்து, அதிலிருந்து 5 ரூபாயை செலுத்துங்கள் என்றார்.
இதைக் கேட்டதும் அந்த நபர் செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து 5 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மோசடியன் பணம் வரவில்லை என்று கூறி, வேறொரு செல்போனில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்துங்கள் என்றார். இதனையடுத்து அவர் சொன்னபடியே செய்திருக்கிறார். இதையடுத்து அவரது வஙகியில் 13 லட்சம் திருடப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொல்கத்தாவில் இருந்துகொண்டு மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீஸார் அங்கு சென்று, மோசடி கும்பலில் ஈடுப்பட்ட 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த ஆவணங்களை கைப்பற்றி, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement