அப்பாவி விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்! 4 பேர் பரிதாப மரணம்! 26 பேர் மருத்துவமனையில் அனுமதி!

அப்பாவி விவசாயிகளுக்கு நேர்ந்த துயரம்! 4 பேர் பரிதாப மரணம்! 26 பேர் மருத்துவமனையில் அனுமதி!


formers died in pudukkottai


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கீழமுத்துக்காடு பகுதியில் உள்ள வயலில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வயலில் கடலை கொள்ளையில் வேலை கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

நேற்று திடீரென பெண்கள் வயலில் வேலை கொண்டிருந்த பகுதியில் பயங்கர இடிச்சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 27 பெண்கள் படுகாயமடைந்தனர். 

formers

இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 27 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மேலும் இரண்டு பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது.