தமிழகம் லைப் ஸ்டைல்

அட பாவிங்களா.! பிணத்தை பாதுகாக்கும் ரசாயனம் தடவிய மீன்கள்.! கெட்டுப்போகாமல் இருக்க செய்யும் தந்திரம்.!

Summary:

Formalin used for preserve fish in madhurai fish market

சடலங்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த பயன்படும் பார்மலின் ரசாயனம் தடவிய 2 டன் மீன்கள் மதுரை கரிமேடு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள இந்த மீன் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 2 டன் மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவற்றில் பார்மலின் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக சடலங்கள் கெட்டுப்போகாமல் இருக்க சடலங்கள் மீது தடவப்படும் ஒரு ரசாயனம்தான் இந்த பார்மலின். இதை மீன்கள் மீது தடவினால் மீன்கள் சுமார் 15 நாட்களை வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ரசாயனம் தடவிய மீன்கள் மீது எந்த வாடையும் வீசாது என்பதால் இதை கண்டுபிடிப்பதும் சிரமம்.

இந்த பார்மலின் தடவிய மீன்களை சாப்பிடுவதால், ஒவ்வாமை வாந்தி, தலைவலி சோர்வு, மந்த நிலை உள்ளிட்டவை ஏற்படும் என்றும் கிட்னி பாதிப்பு கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement