தமிழகம்

மதுரையில் பிரபல மருத்துவமனைக்குள் மீன் வியாபாரமா? சர்ச்சை புகைப்படத்தால் ஷாக்கான பொதுமக்கள்!!

Summary:

fish sale in madurai government hospital

மதுரையில் செயல்பட்டு வரும் ராஜாஜி அரசு மருத்துவமனை மிக முக்கியமான  உயர்சிகிச்சை மையமாக கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த மருத்துவமனை தென் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையின் உள்ளே  மீன் விற்பனை செய்யும் நபர் ஒருவர் தனது இருசக்கரவாகனத்தில் சென்ற புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் சாய்தளத்தில் மீன் வியாபாரி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி சென்று , மீன் விற்பனை செய்யபடுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா கூறியதாவது, மருத்துவமனையின் மேல் தளத்தில் உணவகம் உள்ளது. அதற்கே மீன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் மீன் கொண்டு வந்தவர் வியாபாரி அல்ல மேலும் கொண்டுவரப்பட்ட மீன்கள் விற்பனைக்கும் இல்லை என கூறியுள்ளார்.


Advertisement