தமிழகம்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்! கண் விழித்தபோது கண்ட அதிர்ச்சி காட்சி!

Summary:

Fire accident while girl sleeping in home at chennai

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் இவரது மகள் மீனா மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். தூக்கத்தில் இருந்து எழுந்த மீனா வீடு முழுவதும் புகை மூட்டமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அறையில் இருந்து வெளியே வந்து பார்த்ததில் வீட்டில் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருப்பதை பார்த்த மீனா சத்தம் போட்டுள்ளார். மீனாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நெருப்பை அணைக்க முற்பட்ட நிலையில் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.

இதனால் உதவிக்கு வந்த மக்களும் அலறி அடித்து ஒட்டியுள்ளனர். உடனே அதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். புதிதாக வாங்கிய சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறிப்பட்டுள்ளது.


Advertisement