திடீரென்று பற்றி எரிந்த தீ., அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!!fire-accident-in-sugar-factory

வேலூரில் உள்ள திருவலம் எனும் பகுதியில் அரசு நடத்தி வரும் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சக்கரை ஆலையில் தான் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கரும்பை கொண்டு வருவார்கள்.

இந்த நிலையில் இன்று இந்த சர்க்கரை ஆலையத்தில் பராமரிப்பு பணியை நடைபெற்று வந்துள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வெல்டிங்கில் இருந்து வரும் தீ பொறியின் மூலம் பற்றி விபத்து ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

இந்த விபத்தை, சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு  சர்க்கரை ஆலையத்தை விட்டு விரைந்து வெளியேறினார்கள். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தீயணைப்பு வீரர்களும் தகவல் அறிந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் எவ்வாறு தீப்பிடித்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.