தமிழகம்

2 மாத கைக்குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! காமகொடூர தந்தையின் வெறிச்செயலால் அதிர்ச்சியில் மூழ்கிய தாய்!

Summary:

Father sexually abused 2 month daughter

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் துளசிமாதன். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி முருகாயாள். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளநிலையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

 இந்நிலையில் தாய் முருகாயாள் மகளிர் சுய உதவிக் குழுப் பணத்தை செலுத்துவதற்காக வெளியே செல்லவேண்டி இருந்ததால், தனது பெண் குழந்தையை கணவர் துளசிமாதனிடம் கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கணவர் துளசிமாதன் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொண்டிருந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு  மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்துள்ளார். 

இதற்கிடையில் முருகாயாள் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் துளசிமாதனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement