தமிழகம்

காதல் திருமணம் செய்த மகள்.. ஆத்திரத்தில் மாமியாரை போட்டுத்தள்ளிய தந்தை.. பரபரப்பு சம்பவம்.!

Summary:

காதல் திருமணம் செய்த மகள்.. ஆத்திரத்தில் மாமியாரை போட்டுத்தள்ளிய தந்தை.. பரபரப்பு சம்பவம்.!

மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், அவரின் மாமியாரை தந்தை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணாயிரம். இவரது மகள் காவியா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதன் காரணமாக இரு குடும்பத்தாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆவேசத்தில் இருந்த கண்ணாயிரம் வினித்தின் தாயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வினித்தின் தாயின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மகள் மீது இருந்த கோபத்தில் அவரின் மாமியாரை கொலை செய்ததற்காக, தந்தையை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement