இப்படியும் ஒரு தந்தையா..? இரண்டு பெண் குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற தந்தை, வெளியான உருக்கமான காரணம்..!
இப்படியும் ஒரு தந்தையா..? இரண்டு பெண் குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற தந்தை, வெளியான உருக்கமான காரணம்..!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது இரண்டு மகள்களுக்கும் சாப்டில் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகைதையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவா சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். கீற்று ஏற்றிச்செல்லும் லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டநிலையில் இவர்களுக்கு வருணிகா ஸ்ரீ, ஜனனிகா ஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் சுகன்யா தனது இரண்டு பிள்ளைகளையும் தனது கணவனிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கதிரவன் பலமுறை தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்துவர முயற்சித்தும் அவர் சுகன்யா வருவதாக இல்லை.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லை, மனைவியும் தன்னுடன் இல்லை என்ற சோகத்தில் கதிரவன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது குழந்தைகளுக்கு கடையில் இருந்து சாப்பாடு வாங்கிவந்து, அந்த சாப்பாட்டில் விஷத்தை கலந்து சாப்பிட கொடுத்துள்ளார்.
பின்னர் விஷம் கலந்த சாப்பாட்டை தானும் சாப்பிட்டுவிட்டு மூவரும் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கதிரவன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குடும்ப தகராறு காரணமாக பெற்ற பிள்ளைகளுக்கு தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.