மகளை காதலித்த இளைஞரை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று தந்தை செய்த கொடூர சம்பவம்!



Father killed daughter lover in Chennai

சென்னை தாம்பரம் அருகே தனது மகளை காதலித்த இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் புது பெருங்களத்தூர் அடுத்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா தெருவில் வசிக்கும் கோவிந்தன் நதியாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இவர்களது காதல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

chennai

இதனையடுத்து ஜீவா தனது காதலியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை கோவிந்தன் மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஜீவாவை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கோவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சுடுகாட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

chennai

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலை செய்த கோவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.