தமிழகம் Corono+

கொரோனா அச்சறுத்தல்: விவசாயிகளின் பரிதாபம்! ஆனாலும் அவர்களின் தேசபக்தி!

Summary:

Farmers affected for corona

சீனாவில் தொடங்கிய கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நேற்றுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தினந்தோறும் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசயிகள் கூறுகின்றனர்.

கோடைகாலத்தில் அனல்பறக்கும் வியாபாரம் ஆகும் தர்பூசணி, பல விவசயிகளால் பயிரிடப்பட்டு தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வயலிலே முடங்கி, வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் விவசயிகள் பயிரிடப்பட்ட நெல் தோட்டங்கள் அழியும் நிலை உருவாகியுள்ளது.

நெற்கதிர்கள் விளைச்சல் நேரத்தில் களை எடுக்க ஆட்கள் கிடைக்காமல் விளைநிலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து விவாசாயிகள் கூறுகையில் எங்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதிக்கப்படகூடுது என்ற காரணத்தால் தான் விவசாயிகளும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளோம் என கூறியுள்ளனர்.


Advertisement