அரசு மருத்துவமனை கட்டுவதற்கு பூர்வீக நிலத்தை கொடுத்த விவசாயி.. நாகையில் நெகிழ்ச்சி..!

அரசு மருத்துவமனை கட்டுவதற்கு பூர்வீக நிலத்தை கொடுத்த விவசாயி.. நாகையில் நெகிழ்ச்சி..!


farmer-giving-his-land-for-hospital-construction

அரசு மருத்துவமனை கட்டுவதற்காக தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடுகச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வரன். இவர் ஒரு விவசாயி. இந்த நிலையில் இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகாமையிலும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், போதிய இடவசதி இல்லாததால் என்ன செய்வதென்று மாவட்ட நிர்வாகிகள் யோசித்து கொண்டிருந்தனர்.

nagai

அப்போது விவசாயி வெங்கடேசன் தனது 37 சென்ட் நிலத்தின் பத்திரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கிறார். மேலும், தனது நிலத்தில் மருத்துவமனைக்கான கட்டிடங்கள் கட்டிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ரூ.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மக்களுக்காக மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கிய விவசாயி வெங்கடேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.