தமிழகம்

முழு ஆட்டை பயன்படுத்தி பிரியாணி செய்த சமையல் பிரபலம் திடீர் மரணம்! அதிர்ச்சியில் இணையவாசிகள்!

Summary:

famous youtube chef died

யூ டியூபில் 'கிராண்ட்பா கிச்சன்ஸ்’ நடத்தி வந்த நாராயண ரெட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு அவரது வீடியோக்களை பின்பற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. இவர் தனது 73 வயதிலும் வித்தியாசமான உணவுகளை தயாரித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவரது சமையல் நிகழ்ச்சி யூ டியுப் சேனலில் மிகவும் பிரபலமானது. யூ டியூபில் இவரது "கிராண்ட்பா கிச்சன்ஸ்" என்ற நிகழ்ச்சிக்கு சுமார் 60 லட்சத்திற்கு மேலானோர் பாலோவர்ஸ் உள்ளனர்.

இவர் சமீபத்தில் ஒரு முழு ஆட்டை பயன்படுத்தி பிரியாணி செய்துள்ள வீடியோ இன்றும் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. இவர் சைவம், அசைவ உணவுகளை கிராமத்து வாசனையுடன் சமைப்பதால் லட்சக்கணக்கானோர் விரும்பி பார்க்கின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நாராயண ரெட்டி, கடந்த மாதம் 27ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி தற்போது தான் இணையத்தில் பரவி வருகிறது. இதனையறிந்த அவரது யூ டியூப் விரும்பிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பலர் இணையம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement