ஐயோ எங்களுக்கு கொரோனா வந்திருச்சு..! பயத்தில் மூலிகை மருந்து குடித்த குடும்பம்.! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

கொரோனா வைரஸ் பயத்தால் மதுரை உசிலம்பட்டி அருகே மூலிகை மருந்தை குடித்த தாய் மற்றும் மூன்று மகன்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அசுருதலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது.
இந்நிலையில், கொரோனா குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதால் சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் சில நேரங்களில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குன்னூத்துப்பட்டியை சேர்ந்த கவிதா என்பவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இதில் ஒரு மகனுக்கு, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், கொரோனோவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மூன்று மகன்களுக்கும் மூலிகை மருந்தை கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். மருந்தை குடித்த சில மணி நேரத்தில் நான்குபேரும் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா குறித்த பயத்தாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் குடும்பமே ஆபத்தான நிலையில் இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.