அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. போலி போலீசார் கைது.!

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. போலி போலீசார் கைது.!



Fake police cheat women in Trichy

திருச்சி மாவட்டம் மேலூர் சின்னக்கண்ணு தொப்பை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நீண்ட நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்துள்ளார்.

trichy

அப்போது தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என கிருஷ்ணவேணியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரகாஷ் கிருஷ்ணவேணியன் ஜெராக்ஸ் கடைக்கு அடிக்கடி வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போதே கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவு பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய கிருஷ்ணவேணி பல்வேறு தவணைகளில் 13 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கித் தராமல் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் பிரகாஷ் தன்னை ஏமாற்றியதை அறிந்த கிருஷ்ணவேணி திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

trichy

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டது ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் என்பதும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வைகைநகர் பகுதியில் தற்போது வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.