அட பாவி மனுஷா.. இப்டி பண்ணிட்டியே.! இதை மட்டும் செய்... எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும்.! போலி சாமியாரிடம் ஏமார்ந்த பெண்.!

அட பாவி மனுஷா.. இப்டி பண்ணிட்டியே.! இதை மட்டும் செய்... எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும்.! போலி சாமியாரிடம் ஏமார்ந்த பெண்.!


fake astrologer cheated women

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இவரிடம் நாள்தோறும் சிலர் குறி கேட்டு ஜோதிடம் பார்த்துச்செல்வது வழக்கம். இந்தநிலையில், கரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கபேச்சியம்மாள் என்ற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிட நிலையம் சென்று சக்தியிடம் குறி கேட்டுள்ளார். அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்துபோன உன் கணவரின் ஆன்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவரின் ஆன்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்னை தீரும் என்று கூறியுள்ளார். 

ஆனால் குடும்ப வறுமையில் இருக்கும் சக்தி வீட்டை இடித்து கட்டும் அளவிற்கு என்னிடம் வசதியில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30ஆயிரம் பணத்தை கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார். ஜோதிடரின் பேச்சை கேட்ட அந்த பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். 

இதனையடுத்து அந்த பெண்ணிற்கு குடும்பப் பிரச்னைகள் தீராமல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அப்பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், ரூபாய் 3500 பணத்தையும் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, பூஜையில் வைத்து தருகிறேன். பின்னர் உனது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என கூறியுள்ளார்.

ஜோதிடரின் பேச்சை மீண்டும் நம்பிய அந்த பெண்ணும் 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண் ஜோதிடரிடம் கேட்டபோது ஜோதிடர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் போலி சாமியார் என்பதை உணர்ந்த அப்பெண் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் போலி சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.