கோவிலில் வைத்து காதலிக்கு தாலிகட்டி கரம்பிடித்த காதலன்.. வைரல் வீடியோ.!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம்முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால், இன்றளவில் நடைபெறும் திருமணங்களோ மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் அமைவது காலத்தின் பரிணாம வளர்ச்சியோ? என்ற சந்தேகத்தை பல வருடங்களுக்கு முன்னதாகவே ஏற்படுத்திவிட்டது.
வீதியில் திருமணம், கட்டிய கைலியுடன் திருமணம், பள்ளிக்கூடத்தில் திருமணம் என்று காதல் ஜோடிகள் செய்யும் திருமணங்கள் பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த நவ. 17 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த விடீயோவில், மணப்பெண் அலங்காரம் செய்துள்ள பெண்மணியின் கழுத்தில் அவரது காதலர் தாலி காட்டுகிறார். அரசமரத்தடியில் உள்ள கோவிலில் வைத்து இத்திருமணம் நடைபெறுகிறது. இது எங்கு எப்போது பதிவு செய்தது என்ற விபரம் இல்லை. திருமணம் செய்வது பெரிய விஷயம் அல்ல, தன்னை நம்பி வந்த பெண்ணை மதிப்புடன், கனிவாக காலம் முழுவதும் வைத்து காப்பாற்ற வேண்டும். அதுதான் காதலுக்கு இக்காதல் ஜோடி செய்யும் மரியாதை.
இந்த வீடியோ பதிவிட்டுள்ள நபரின் கமெண்டில் இந்த காதல் திருமணத்திற்கு ஆதரவான கருத்துக்களும், எதிர்ப்பான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.