தமிழகம்

திடீரென வெடித்து சிதறிய மர்ம பொருள்.. இரண்டு சிறுவர்கள் காயம்.!

Summary:

exploded-with-a-terrible-noise 2-boys-injured Kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் தெற்கு காலணியை சேர்ந்தவர்கள் கலையரசன் மற்றும் கருப்பசாமி என்ற சிறுவர்கள். இவர் இருவரும் நேற்று மாலை தங்களது பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.

அந்த மர்ம பொருள் வெடித்ததில் அவ்வழியாக நடந்து சென்ற இரண்டு சிறுவர்களும் மீதும் பட்டு காயம் அடைந்துள்ளனர். மேலும் சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து போலீசார் விரைந்து வந்து வெடித்து சிதறிய மர்ம பொருளின் துகள்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement