தமிழகம்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Summary:

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணமலை, நாமக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 


Advertisement