அரசியல் தமிழகம்

சிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்.!

Summary:

Ex ADMK MLA Balakrishnan passed away

சிவகாசி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (சனிக்கிழமை) உடல்நல குறைவால் காலமானார். 

1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு சிவகாசி சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.பாலகிருஷ்ணன். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வி.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.பாலகிருஷ்ணன் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement