தமிழகம்

பட்டப்பகலில் பயங்கரம்.. தனியே இருந்த பெண் கழுத்தை நெரித்து கொலை.. நடந்தது என்ன?..! பகீர் சம்பவம்.!!

Summary:

பட்டப்பகலில் பயங்கரம்.. தனியே இருந்த பெண் கழுத்தை நெரித்து கொலை.. நடந்தது என்ன?..! பகீர் சம்பவம்.!!

மர்ம நபர்களால் பட்டப்பகலில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈபிபி நகர், பிபி கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. இவரும், இவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆறு மாத காலமாக புவனேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மதிய வேளையில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் புவனேஸ்வரியை காண வழக்கம்போல சென்றுள்ளனர். 

அப்போது அங்கு புவனேஸ்வரி இல்லாததால், படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் சடலமாக இறந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எப்பொழுது கொலை செய்தார்கள்? என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement