கள்ளக்காதலியின் 11 வயது மகனுக்கு பாலியல் தொல்லை.. ஈரோட்டில் திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு பின்னணி.!
தனியார் பள்ளி ஆசிரியை மகனை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற இடத்தில் தனியார் மருத்துவமனை ஊழியருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திய நிலையில், மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தம்பதிகள்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டி, கங்கா கார்டனில் தனியார் கார் நிறுவன விற்பனை பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு 11 வயதில் மகன் இருக்கிறார். சிறுவன் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!
பயிற்சி:
ஈரோட்டில் உள்ள மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜா (வயது 30). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். கூடைப்பந்து பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வருகிறார். தம்பதியின் மகனை கூடைப்பந்து பயிற்சிக்காக முத்துராஜாவிடம் அனுப்பி வைத்துள்ளனர். மகனை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற இடத்தில், முத்துராஜா - சிறுவனின் தாயான தனியார் பள்ளி ஆசிரியையிடம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நெருக்கம்:
பின் ஒருகட்டத்தில் இருவரும் தனிமையில் நெருங்கி பழகியதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பான தகவல் கார் விற்பனை பிரதிநிதிக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், 11 வயது சிறுவனை முத்துராஜா பயிற்சி என்ற பெயரில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்த கார் விற்பனை பிரதிநிதி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துராஜா, கார் விற்பனை பிரதிநிதியின் மனைவி, முத்துராஜாவின் நண்பர் வினோத் (வயது 30) ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார்.
புகார்:
இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் முத்துராஜா, வினோத், கார் விற்பனை பிரதிநிதியின் மனைவிக்கு எதிராக போக்ஸோவில் புகார் வழக்குப்பதிவுக்கு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வேலை இடத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஷாக்.. அதிரடி காட்டிய போலீஸ்.!