Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அரசுப்பள்ளி ஆசிரியை கொடூரமாக குத்திக்கொலை; வீடுபுகுந்து நடந்த கொடூரம்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.!
அரசுப்பள்ளி ஆசிரியை கொடூரமாக குத்திக்கொலை; வீடுபுகுந்து நடந்த கொடூரம்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம், வ.உ.சி வீதியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியர் ஆவார். இவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 53).
இவர் வைராபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இருவரும் சொந்த வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.
இன்று காலை 06:30 மணியளவில் மனோகரன் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றுவிட, வீட்டில் புவனேஸ்வரி தனியாக இருந்துள்ளார். நடைப்பயிற்சியை முடித்துவிட்டு மனோகரன் 08:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, புவனேஸ்வரி வீட்டு கட்டிலில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம் பதினாறு, சூரம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.