17 வயது சிறுமியுடன் 4 மாதமாக காதல் திருமண குடித்தனம்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!

17 வயது சிறுமியுடன் 4 மாதமாக காதல் திருமண குடித்தனம்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!


Erode Bhavanisagar Minor Girl Love Trap Marriage Police Arrest Culprit Pocso Act

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் நகரில் 17 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த 4 மாதத்திற்கு முன்னதாக திடீரென மாயமாகவே, பெற்றோர்கள் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பவானிசாகர் அந்நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் லோகேஷ் குமார் (வயது 25) என்பவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது அம்பலமானது.

erode 

இதனையடுத்து, தலைமறைவாக வாழ்ந்து வந்த லோகேஷ் குமார் மற்றும் மாணவியை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரின் இருப்பிடமும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் லோகேஷ் குமாரை கைது செய்து சிறுமியை மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுமி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், லோகேஷ் குமாரின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.