62 வயதில் விதவை பெண்ணுக்கு அதிமுக பிரமுகரால் நடந்த கொடுமை.. ஆபாச பேச்சு, சேட்டிங் சில்மிஷங்கள்.!
62 வயதில் விதவை பெண்ணுக்கு அதிமுக பிரமுகரால் நடந்த கொடுமை.. ஆபாச பேச்சு, சேட்டிங் சில்மிஷங்கள்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்ற ராமசாமி (வயது 62). இவர் பொம்முடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான விதவைப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி காதல் வலை வீசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் அழகை வர்ணித்து வாட்ஸப்பில் காதல் கவிதை அனுப்பியது, இருவரும் சந்தித்தது என்று ஒவ்வொன்றாக வெளிவந்து திருமணம் செய்துகொள்வதாக அவர் கூறியதும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், மதுபானம் அருந்தலாமா? என்று சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து, லவ் யூ பொண்டாட்டி என்று கூறுவது போன்று அந்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், சம்பந்தப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது. பெருந்துறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு நெருங்கிய நண்பராக விஜயன் இருப்பதால், இதனை வெளியே சொல்ல முடியாமல் பெண்மணி தவித்ததாகவும், ஒரு கட்டத்தில் செல்போன் உரையாடல் மற்றும் ஆடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைதளத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.