AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
உஷார்.. ஆசையாக வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மரணம்.. ஈரோட்டில் சோகம்.!
ஈரோடு கருங்கல்பாளையத்தில் 5 வயது சிறுவன் வாழைப்பழம் சாப்பிடும் போது மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதிக்கு 5 வயதுடைய சாய்சரண் என்ற மகன் இருக்கிறார். இதனிடையே நேற்று சிறுவனுக்கு சாப்பிட வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. சிறுவனும் அதனை ஆசையாக வாங்கி சாப்பிட்ட நிலையில், சாப்பிடும் போது திடீரென மூச்சு திணறலை எதிர்கொண்டுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு:
இதனால் பதறிப் போன பெற்றோர் உடனடியாக சிறுவன் சாய்சரணை அழைத்துக் கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! 5 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய வாழைப்பழம்! கதறி துடித்த பெற்றோர்.... .ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி!
மூச்சுக்குழாயில் பழம் சிக்கி சோகம்:
சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுவனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
மேலும் சிறார்களுக்கு வாழைப்பழம் உட்பட எந்த உணவை கொடுக்கும் போதும் முடிந்த அளவு மசித்து கொடுக்க வேண்டும் எனவும், முழு பழமாக கொடுக்க கூடாது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். குழந்தைகள் நாம் கொடுக்கும் உணவை ஆர்வத்துடன் முழுவதுமாக சாப்பிட எண்ணுவார்கள் என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.