தமிழகம்

மின்சார வாரிய அலுவலகத்துக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஊழியர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Embloyee dead inside of office

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் பகுதியை சேர்ந்த பழம்பதி என்பவரின் மகன் காளிதாஸ். அவர் கீரமங்கலத்தில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் இன்று அலுவலகத்தில் யாரும் இல்லாத நிலையில், காளிதாஸ் அங்கு சால்வை ஒன்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குடி காவல் ஆய்வாளர் உயிரிழந்த காளிதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காளிதாஸின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசாரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement