உஷார் மக்களே! 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனை; அமலாகிய தேர்தல் விதிகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் நேற்று மாலை வெளியானதையடுத்து நாடு முழுவதும் அனைத்து செயல்பாடுகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதன் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகள் பற்றிய விளக்கமளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், அரசியல் கட்சியுனருடன் விளக்க கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றி அரசியல் கட்சியினரிடம் பிரகாஷ் விளக்கி கூறினார். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் சுவர்களில் கட்சி விளம்பரங்கள் இருக்க கூடாது என்பதாகும்.
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று குழுவினரும் (8x3=24) 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் அந்ததந்த பகுதிகளில் சோதனைகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்த சோதனைகளில் குறிப்பாக உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் 10 லட்சத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அவர்கள் வருமாண வரித்துறையின் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.