ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு; வியாபாரிகள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை.!

ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு; வியாபாரிகள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை.!



Elakkai Price Hike due to Summer Season 

 

கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைப்பது போல, ஏலக்காய் செடிகளையும் கருக்கி வருவதால் கடந்த வாரம் கிலோ ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சுமாரான ஏலக்காய் ரூ.2200 க்கும் மேலும், தரமான ஏலக்காய் ரூ.3000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போதைய சூழலில் கேரளா மாவட்டத்தில் உள்ள இடுக்கி, தமிழ்நாட்டில் ஏலக்காய் விளையும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனால் 75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெப்பம் உயர்ந்து ஏலக்காய் செடிகள் கருகி வருகின்றன. 

பொதுவாக இந்திய ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் நுகர்வு அதிகம் எனினும், தற்போது வெயிலில் ஏலக்காய் செடிகள் கருகி வருவதால் விலை உச்சத்தை அடைந்துள்ளது. வரும் நாட்களில் ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிக்கும் பட்சத்தில், கட்டாயம் ஏலக்காயின் விலை புதிய உச்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் விவசாயிகளுக்கு பெரிய இலாபம் இல்லை எனினும், அதனை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கட்டாயம் பன்மடங்கு இலாபத்தை அளிக்கும்.