பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால்... எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!Eighth grade student hanged himself because his parents forced him to go to school..!

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகரில் குடியிருப்பவர் சிவகுரு. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அரசகுரு(13) அருகே இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு செல்ல விரும்பாமல்  வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் பெற்றோர்கள் அரசுகுருவை சமாதானம்செய்து பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளனர்.

இன்று கட்டாயம் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று பெற்றோர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்ற அரசுகுரு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அங்கிருந்த  உறவினர்கள் அரசகுருவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை பார்த்து மனமுடைந்த  பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுத்தனர்.

உடனே அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை இருந்ததா அல்லது வேற ஏதாவது காரணம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.