அரசியல் தமிழகம்

மு.க.ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்.!

Summary:

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்ம

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து கடந்த 4-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இதனையடுத்து நேற்று முன்தினம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க ஸ்டாலின் கொடுத்து ஆட்சி அமைக்க கூறினார். பின்னர், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று கூறி மு.க்.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணம் செய்த போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டார். 


Advertisement