#Breaking: பனையூர் பண்ணையாரை போட்டுத்தாக்கிய அதிமுக.. தமிழக அரசியலில் தகிட., தகிட சம்பவம்.!
பெரியார், அண்ணா, எம்ஜிஆர்-ன் பெயரில் விஜய் சவாரி செய்வதை முதலில் நிறுத்த வேண்டும் என அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
சேலத்தில் விஜய் பேச்சு:
TVK Vijay Salem: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பின்போது பேசிய விஜய், அதிமுகவை தான் ஏன் விமர்சிப்பது இல்லை என பதிலளித்து இருந்தார். அதாவது, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளை மறந்துபோய் அதிமுக செயல்படுகிறது. பாஜகவுடன் நேரடி டீலிங் வைத்துக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுகிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியை தான் எதிர்க்க வேண்டும். மக்கள் வேண்டாம் என முடிவெடுத்து ஒதுக்கிய நபர்கள் குறித்து நாம் ஏன் பேச வேண்டும் என விஜய் பேசி இருந்தார். இந்த விஷயத்துக்கு அதிமுக ஐடி விங் தற்போது பதிலடி கொடுத்து இருக்கிறது.
இதையும் படிங்க: TVK Vijay Vs Edappadi Palanisamy: 'விஜய் ஒரு ஊழல்வாதி' - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!
அன்றும-இன்றும்:
முன்னதாக, கரூர் துயரத்தில் தொடங்கி, விஜயை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என அதிமுக தலைமை விஜய்க்கு சாதகமான மறைமுக தூதுகளை விடுத்து வந்தது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, மதவாத சக்தியுடன் கூட்டணி இல்லை என அதிமுக, பாஜக கூட்டணியை விமர்சித்து தவெக தொடர்ந்து பேசி வந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறாது என்பது உறுதியானதும், அதிமுக தலைமை பதில் விமர்சனத்தை தொடர்ந்து இருந்தது. விஜயும் நேரடியாக பல மேடையில் அதிமுகவை மறைமுகமாக தாக்கி பேச தொடங்கினார்.

விஜய்க்கு கடும் கண்டனம்:
இந்நிலையில், இன்றைய விஜயின் சேலம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், "நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க.. வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control என்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்.
விஜய் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்:
சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

எங்கள் முழக்கம் அண்ணா நாமமே:
எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்! எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான் நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்! "அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.
அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!" என பதிலடி தரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கோட்டையில் இறங்கியடித்த விஜய்.. விமர்சனம் செய்யாதது ஏன்? தெறி பேச்சு.!