வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.. டாஸ்மாக்கில் கூலிங் பீர் விற்பனை அதிகரிப்பு.. ஜில் பீர் கேப்பதில் இவர்கள் தான் முதலிடம்.!!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.. டாஸ்மாக்கில் கூலிங் பீர் விற்பனை அதிகரிப்பு.. ஜில் பீர் கேப்பதில் இவர்கள் தான் முதலிடம்.!!


Due to Summer Season Tasmac Sales Cool Beer

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயில் கடுமையாக அதிகரிக்கலாம் என மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் கோடைகாலமும் தொடங்கவுள்ளது. பலரும் சாலையோரங்களில் இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் பழங்கள், பானங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். வாகன ஓட்டிகளும் மக்களும் இயற்கை பானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், குடிகாரர்கள் மதுபானக்கடைகளில் பீர் கேட்டு குடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வெயிலில் அலைந்து பணியாற்றும் இளைஞர்கள், ஐ.டி ஊழியர்கள் போன்றோர் குளிர்ந்த பீர் வகையை விரும்புவதாகவும், அதனால் பீர் விற்பனை மதுபானக்கடைகளில் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. டாஸ்மாக்கில் ரெபிரிஜிரேட்டர் தேவையும் அதிகரித்துள்ளன. 

tasmac

ஒருசில கடைகளில் குளிர்ச்சியான பீர் இல்லையென்றால் டாஸ்மாக் ஊழியர்களை கும்பல் மிரட்டி செல்வதாகவும் புகார்கள் வருகின்றன. குளிர்ந்த பீருக்கு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபிரியர்கள் எவ்வுளவு விலைகொடுத்து பீரை வாங்க தயாராக இருக்கின்றனர். தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் புறநகர் பகுதியான நெற்குன்றம், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் குளிர்ந்த பீர்கள் எளிதில் கிடைக்கிறது. 

அதனைப்போல, வேளச்சேரி, வளசரவாக்கம், ஜாபர்கான்பேட்டை, கே.கே நகர், முகப்பேரு பகுதியிலும் பீர்கள் கிடைக்கின்றன. பீர்களின் விற்பனை இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளதால், டாஸ்மாக் பணியாளர்களும் சுதாரித்து அதிகளவு பீர் விற்பனையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. வெயிலால் பீர் விற்பனை ஒருபுறம் அதிகரிக்க, பிராந்தி மற்றும் விஸ்கி போன்ற மது வகைகளின் விற்பனை குறைந்துள்ளது.

"மதுபானம் அருந்துவது உடல் நலத்தை சீரழிக்கும், மரணத்தை ஏற்படுத்தும்"