விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... சோகத்தில் ரசிகர்கள்.!

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... சோகத்தில் ரசிகர்கள்.!


due-to-illness-vijayakanth-again-admitted-to-hospital-i

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த மாத இறுதியில் வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.

அதனையடுத்து விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து விஜயகாந்த்தின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.

Vijayakath

அதனையடுத்து பிரேமலதாவும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2 ஆம் தேதி இருவரும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் திடீரென நேற்று இரவு விஜயகாந்த்தின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.