மூக்கு முட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள்; சென்னையில் நடந்த அட்டூழியம்...!!Drunken women who ran riot in the middle of the road; Atrocity in Chennai...

மது போதையிலா மூன்று பெண்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். 

சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மது போதையில் மூன்று பெண்கள் சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, மது போதையில் இருந்த மூன்று பெண்கள், சென்னை மாநகர பேருந்தை வழிமறித்து, பேருந்துக்கு கீழே படுத்துக் கொண்டு, ரகளை செய்து கொண்டிருந்தனர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் பேருந்தின் அடியில் புகுந்த மூன்று பேரையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் எதற்கும் அடங்காமல் தன்னிலை மீறிய போதையில் இருந்த அவர்கள் மூன்று பேரும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ரகலியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் மூன்று பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் போதையை தெளியவைத்து விசாரணை நடத்தியதில் மூன்று பெண்களும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

இந்நிலையில் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறுவதற்கு வேலைக்கு வந்தனர் என்றும், வேலையை முடித்துவிட்டு நன்றாக குடித்துவிட்டு போதையில், ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் மது அருந்திவிட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மீதும் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.