மதுபோதையில் கொள்ளையடிக்க சென்ற திருடன்.! போதை தலைகேறியதால் மட்டை.! பரபரப்பு சம்பவம்.!

மதுபோதையில் கொள்ளையடிக்க சென்ற திருடன்.! போதை தலைகேறியதால் மட்டை.! பரபரப்பு சம்பவம்.!


drunken-robber-in-the-house-where-the-robbery-took-plac

கோவை மாவட்டத்தை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி ஆனந்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர்களது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர் அதன் அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து பதறிப்போன ஆனந்தி அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.

arrest

சேகரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன், அளவுக்கு அதிகமான போதையில் விழுந்து கிடப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை தெளிய வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் பெயர் நாகராஜ் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.