மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.70 கோடி மதிப்பிலான போதை பொருள்; தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்..!
மலேசியாவில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட வரப்பட்ட 10 டன் போதைப் பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மலேசியாவில் இருந்து ரூ.1.70 கோடி மதிப்பிலான 10 டன் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது. கடத்தி வரப்பட்ட போதை பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒயிட் சிமெண்ட் எனப்படும் மூலப்பொருள் கொண்டு வரப்பட்டது.
இதில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பாப்பி சீட் எனப்படும் போதைப் பொருள் கடத்தி கொண்டு வரப்படுகிறது என்று மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கப்பல் கரைக்கு வந்ததும் உடனடியாக அதிகாரிகள் கப்பலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கப்பலில் ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் பெட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 10 டன் எடை கொண்ட பாப்பி சீட் எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துருக்கி, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் மட்டுமே இந்த பாப்பி சீட் போதைப்பொருளை பயன்படுத்த அனுமதி இருக்கிறது.
இதை தொடர்ந்து சட்டவிரோதமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் பெட்டி எந்த முகவரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.70 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது