"டிரைவர் அங்கிள், பேட் டச்..." 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! பாஜக பிரமுகர் அதிரடி கைது.!

"டிரைவர் அங்கிள், பேட் டச்..." 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! பாஜக பிரமுகர் அதிரடி கைது.!


driver-uncle-bad-touch-9-year-old-girl-sexually-harasse

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 90 வது வார்டு பாஜக தலைவராக இருப்பவர் ரமேஷ். 40 வயதான இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமங்கலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் ஒன்பது வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

tamilnaduஇது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் டிரைவர் அங்கில் பேட் டச்  செய்கிறார் என தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறைமுகமாக டிரைவரை கண்காணித்து வந்த பெற்றோர் வீடியோ ஆதாரத்தின் மூலம் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர்.

tamilnaduஇதனையடுத்து டிரைவருக்கு எதிராக காவல்துறையிடம் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் பாஜக பிரமுகர் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.