தமிழகம்

உயிரிழந்த தனது உரிமையாளரின் சடலத்தை சுற்றிவந்து கதறிய நாய்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

Summary:

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம் என்று பல

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம் என்று பலரும் கூறுவார்கள். அதனால் தான் பலரின் வீட்டிலும் நாய் வளர்ப்பார்கள். பலரது வீட்டில் நாயை ஒரு பிள்ளையாகவே கருதி வளர்ப்பார்கள். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத நன்றியுள்ளம் கொண்ட குணத்தை நாயிடம் காணலாம். 

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஆடுகள் வளர்த்து காலத்தை ஓட்டி வந்துள்ளார். இந்தநிலையில் அவர் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் ஆடுமேய்க்கச் சென்றுள்ளார். அப்போது இடி தாக்கி பரிதாபமாக இறந்துள்ளார். 

இதனையடுத்து, ராமச்சந்திரன் இறந்தது குறித்து தகவலறிந்த உறவினர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கட்டிலில் வைத்து தூக்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது ராமச்சந்திரனின் வளர்ப்பு பிராணியான நாய் அவரது உடலை சுற்றியும், தாவி குதித்தும் தனது எஜமானனை இழந்த பரிதவிப்பை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ராமச்சந்திரன் உடலை எடுக்கும்வரை அவரது நாய் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது. இந்த நிகழ்வு அங்கிருப்போர்களை கண்கலங்க வைத்தது.


Advertisement