மருத்துவர் வீட்டில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னை தாம்பரம், சி.டி.ஓ காலனியைச் சேர்ந்தவர் தீபக். 28 வயது நிரம்பியப இவர், சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டில் முடிச்சூர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண் தன் வீட்டில் இருந்து வெள்ளி பொருட்களை திருடியதாக மருத்துவர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மருத்துவரின் புகாரை ஏற்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த இளம்பெண் மருத்துவர் வீட்டில் பணிபுரிந்த போது, தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், கடந்த 18ஆம் தேதி முதல், பணியில் இருந்து நின்றுவிட்டதாகவும், சம்பள பாக்கியை வாங்குவதற்காக நேற்று முன்தினம் மருத்துவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர் தீபக்கும் அவரது உறவினர் ஆனந்த் என்பவரும் சேர்ந்து, தன்னை நான்கு மணி நேரம் வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களது, ஆசைக்கு இணங்க மறுத்ததால் என் மீது திருட்டு புகார் கொடுத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவர் தீபக் மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்தனர்.