திமுக பிரமுகரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிசாய்த்த பாஜக பிரமுகர்.. திருநெல்வேலியில் பரபரப்பு.!

திமுக பிரமுகரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிசாய்த்த பாஜக பிரமுகர்.. திருநெல்வேலியில் பரபரப்பு.!


DMK Supporter Murder Attempt by BJP supporter

பாஜக பிரமுகர் திமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி கண்ணன். அதே பகுதியை சார்ந்த பாஜக பிரமுகர் ராஜேஷ். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் வீட்டில் இருந்த திமுக பிரமுகர் ஆண்டி கண்ணனின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். 

tirunelveli

இரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் துடித்த கண்ணனை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைமறைவான பாஜக பிரமுகர் ராஜேஷுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.