முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கடந்த 12-ந் தேதி காலமானார். இதனால் அனைத்து அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு முதல்வர் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார். தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றதோடு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதல்வர் நேற்று மாலை சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரை இன்று நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பு இன்று காலை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.