தமிழகம்

திமுக முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் மறைவு; சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.!

Summary:

dmk rajyasaba ex mp sivasubramanian death

திமுகவின் சார்பாக மாநிலங்களவையில் (1998 - 2004 ) வரை முன்னாள் எம்பியாக இருந்தவர் சிவசுப்பிரமணியன். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவரது மறைவால் திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்த பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement