எடுபடுமா திமுகவின் தேர்தல் வியூகம் 2024?... அதிரடி உத்தரவிட்ட தலைவர்., பரபரப்பாகும் உடன்பிறப்புகள்.!

எடுபடுமா திமுகவின் தேர்தல் வியூகம் 2024?... அதிரடி உத்தரவிட்ட தலைவர்., பரபரப்பாகும் உடன்பிறப்புகள்.!


DMK President MK Stalin Order to District Secretary

 

2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவிலான கூட்டணியை அமைக்க ஒவ்வொரு கட்சியும் செயலாற்றி வருகிறது. மாநில அளவில் ஆளும் கட்சியாக இருக்கும் பல அரசியல் இயக்கங்கள் எம்மாதிரியான முடிவுகளை எடுக்கப்போகிறது என்பது குறித்த பேச்சுக்கள் தற்போதில் இருந்து எழுத தொடங்கிவிட்டது. 

இந்த நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக பல வியூகங்கள் அமைத்து தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அரியணை ஏறியது. அரசியலில் சாணக்கியன் என்று போற்றப்பட்ட கலைஞரின் மறைவுக்கு பின்னர், அவர் இல்லாமல் முதன் முதலாக திமுக அரியணையில் அமர்ந்துள்ளது. 

tamilnadu

கடந்த 5 ஆண்டுகளாக அரசியலில் நடந்த பல்வேறு குளறுபடிகள் திமுகவின் பக்கம் மக்களை எளிதாக திசைதிருப்பிவிட, அதே பார்முலா மற்றும் திமுகவின் வியூகம் மக்கள் மத்தியில் மீண்டும் எடுபடுமா? என்ற விஷயம் தேர்தலுக்கு பின்னரே உறுதியாகும். பாராளுமன்றமாக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அரசியல் தமிழகத்தில் நடைபெறும். 

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனது கூட்டணியோடு தமிழ்நாடு & புதுவையை சேர்ந்து 40 தொகுதியையும் வெற்றியடைய முயற்சித்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் அதனை உத்தரவாகவும் இட்டுள்ளார். களப்பணிகளையும் தீவிரப்படுத்த ஆணையிட்டுள்ளார்.