"அன்பு, நன்றியுள்ளம் கொண்ட ஜீவனுடன் உதயத்தின் நாயகன்"; கொண்டாட்டத்தில் உடன்பிறப்புகள்.!DMK minister Udhayanidhi Stalin With Dog 

 

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளராக வலம்வந்த உதயநிதி ஸ்டாலின், பின்னாளில் நடிகராக தமிழக மக்களிடம் அறிமுகமானார். அவர் நடித்த பல்வேறு படங்களும் வெற்றிபெற்றன. 

இதனையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் களமிறங்கியவர், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற சில ஆண்டுகள் கழித்து விளையாட்டுத்துறை அமைச்சராகினார். 

தற்போது தீவிர களப்பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிப்பதில் இருந்து விடுப்பு எடுத்து இருக்கிறார். அவ்வப்போது தனது கருத்துக்களை இவர் ட்விட்டரில் பதிவு செய்வது வழக்கம். 

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், வீட்டில் தன்னால் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட, அது திமுக உடற்பிறப்புகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது..