அரசியல் தமிழகம்

திமுக கூட்டணி உறுதியானது.! காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் அனைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. 

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதற்குப் பிறகு காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. இந்தநிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்று காங்கிரஸிற்கான இடங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

இந்த நிலையில்  இன்று காலை திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின்- கேஎஸ் அழகிரி  முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 


Advertisement